உல்லாச பயணிக்கு தொந்தரவு கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி

Report Print Ajith Ajith in சமூகம்
322Shares

மாத்தறை வெலிகம பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் வெளிநாட்டு உல்லாச பயணி ஒருவர் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளது.

இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புகழ் பெற்ற இணையவழி வாடகை சேவையை சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் வெலிகம ரயில்வே நிலையத்தில் வைத்து வெளிநாட்டு உல்லாச பயணிகளை தொந்தரவுக்கு உள்ளாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பல தடவைகளாக இவ்வாறான சம்பவங்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.


you may like this video