மாணவி வித்தியா படுகொலையின் கொலையாளிகளின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைகளின் போது கொலையாளிகளின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பல வருடங்களாக குற்ற விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அங்குள்ள அதிகாரிகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

அந்த மோட்டார் சைக்கிள் குற்ற விசாரணை திணைக்கள பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக்கரத்ன மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த மோட்டார் சைக்கிள்களின் இலக்க தகடுகள் மாற்றப்பட்டு குற்ற விசாரணை திணைக்களத்தின் பொலிஸ் குழுவினரினால் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்.

அதற்காக அப்போதைய குற்ற விசாரணை திணைக்களத்தின் இயக்குனராக இருந்த சிரேஷ்ட அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் ஆதரவுடன் இந்த மோட்டார் சைக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் மோட்டார் சைக்கிள்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதென்பது சட்டவிரோத செயலாகும். இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


you may like this video