கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

Report Print Vethu Vethu in சமூகம்

மொரட்டுவையில் இருந்து மருதானை நோக்கி கடலோர ரயில் வீதியில் பயணித்த ரயில் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.50 மணியளவில் மொரட்டுவையில் இருந்து பயணித்த 325 ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீயணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துரிதமாக செயற்பட்டமையினால் ஆபத்தின்றி பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த அனர்த்தம் காரணமாக கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் பயணங்களுக்கு தாமதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.