வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் மீது துப்பாக்கி சூடு

Report Print Vethu Vethu in சமூகம்
1302Shares

தென்னிலங்கையில் நபர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலபிட்டிய, வெலிவத்துகொட பிரதேசத்தில் இன்று காலை 7 மணியளவில் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த 36 வயதுடைய சுனில் குமார என்ற ஒரு பிள்ளையின் தந்தை மீதே இன்று இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்தாக குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி புரிந்து வரும் நிலையில், கடந்த மாதம் இலங்கை வந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


you may like this video