யாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு

Report Print Theesan in சமூகம்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் சகிலா பானு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உணவகத்தை திறந்து வைத்துள்ளார்.

சுமார் ஐந்து மில்லியன் செலவின் அமைக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அதனைச் சூழ உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பயனடையவுள்ளனர்.

அம்மாச்சி உணவகம் வவுனியா வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்தாலும் வீதிப் பயணிகள் மற்றும்ம அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எந்த வேளையிலும் பயன்படுத்த முடியும் என வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், அரச அதிபர் சமன் பந்துலசேன, வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஷ்வன் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் க.கணேசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.