இந்திய மீனவர்கள் 11 பேருக்கு விளக்கமறியல்

Report Print Sumi in சமூகம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி நுழைந்த இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 3 விசைப்படகுகளில் நெடுந்தீவுக்கு மேற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் நீர் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .

குறித்த மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. ஜூட்சனின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் மீனவர்கள் 11 பேரையும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.