200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து - மூவர் பலத்த காயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு தலவாக்கலை ட்ரூப் தோட்ட பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டியே வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.