கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய கொழும்பு வர்த்தகர்

Report Print Ajith Ajith in சமூகம்

இந்தியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

அவரின் காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 1கிலோ 400 கிராம் நிறைகொண்ட 12 தங்கப்பாளங்கள் கைப்பற்றப்பட்டன.

36 வயதைக் கொண்ட கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரே கைது செய்யப்பட்டவராவார்.

இந்த தங்கப்பாளங்களின் மொத்த பெறுமதி 12.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கப்பாளங்கள் அரசுடைமையாக்கப்பட்டதுடன் 1.3 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.