மாணவர்களை வன்புணர்வுக்கு உள்ளாகிய அதிபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

நான்கு பாடசாலை மாணவர்களை வன்புணர்வுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக பொலன்நறுவை லங்காபுர பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னம்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைலக்குமாறு நீதவான் சுரங்க அசேல டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்நறுவை வெவ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தன கருணாதிலக்க என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்நறுவை புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் நான்கு சிறுவர்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரான பாடசாலை அதிபரை கைது செய்துள்ளனர்.