முன்னாள் ரஸ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் முன்னாள் ரஸ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் அவர் ஓமான் மஸ்கட்டில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே ரஸ்ய தூதுவராக பதவி வகித்த காலத்தில் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு கொள்வனவு செய்யப்பட்ட மிக் 27 ரக விமானத்தில் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், பாரிய நிதிச்சலவை குற்றச்சாட்டும் உதயங்க வீரதுங்கவின் மீது சுமத்தப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்கு பின்னர் யுக்ரெய்னில் தங்கியிருந்த பின்னர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.