வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பில் வன்னி மக்களிற்கு விரைவில் நற்செய்தி!

Report Print Theesan in சமூகம்

வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது.

இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும், தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக வர்த்தமானியில் அறிவிக்க வேண்டிய விடயம் மட்டுமே உள்ளது. அரசாங்கங்கள் மாறும் போது ஆட்சி அதிகாரம் மாறும் போது இத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் இவ்வாட்சியிலும் இது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், ஏன் பல்கலைக்கழகம் எமது மாவட்டத்திற்கு வரவேண்டும் என்பது தொடர்பாக தற்போதைய அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

அதன்படி இம்மாதத்திலேயே வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.