எதிர்வரும் வாரத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முழுமையான நடவடிக்கை! வட மாகாண ஆளுநர் உறுதி

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான மணல் அகழ்வுகளை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.ஏச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - முத்து ஐயன்கட்டு பகுதியில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான மணல் அகழ்வுகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பொதுமக்கள் ஆளுநர் செயலகத்திற்கு நேரடியாகவே அனுப்பி வைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் ந. சுதாகரன் வடமாகாண ஆளுநர் பி.ஏஜ் எம். சாள்ஸ்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த .அகிலன், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.