மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! ஒட்டுசுட்டானில் சம்பவம்

Report Print Murali Murali in சமூகம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், முத்துஜயன் கட்டுப்பகுதியில் சிறுமியான மகளை நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முத்துஜயன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, தனது மூத்த மகளான 15 வயது சிறுமியை கடந்த மூன்று மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, சந்தேக நபரை கைது செய்த பொலஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் வெவ்வேறு பகுதிகளில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை, வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் அண்மையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this video