யாழில் நடந்த துயரச் சம்பவம் - பரிதாபமாக பறிபோன உயிர்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் சங்கானையை சேர்ந்த 17 வயதான நல்லகுமார் நிசாந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விற்பனை நிலையத்தின் நான்காம் மாடியில் உருளைக் கிழங்கு வெட்டும் உபகரணத்தில் அவர் வேலையில் இருந்துள்ளார்.

குறித்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிசாந்தன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணையை நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


you may like this video