தென்னிலங்கையில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் - மாணவர்களுக்கு இடையில் மோதல்

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் பல பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையில் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் வாதுவ பிரதேச பாடசாலை ஒன்றில் அதிபர் ஒருவர், நூற்றுக்கு 80 வீதம் பாடசாலைக்கு வருகைத்தராத மாணவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதிக்க முடியாதென கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் சிலர் குடிபோதையில் அங்கு வந்து அதிபரை தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடசாலை நிர்வாகத்தினால் 3000 பேருக்கு மத்தியில் குறித்த மாணவர்களை அதிபரிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டது.

அதேவேளை வாதுவ, மாவல பிரதேசத்தில் பெண் அதிபரை தகாத வார்த்தை திட்டிய களுத்துறை பிரதேச சபை உறுப்பினரை பொலிஸார் மன்னிப்பு கேட்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த தாமதமாகியமையினால் பிரதேச மக்கள் இணைந்து எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் பாடசாலை மாணவனை கொட்டி தேரருக்கு எதிராக வாதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமையினால் இரண்டு தரப்பிற்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மற்றுமொரு பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்குவதக்காக போதை மருந்து புதைக்கப்பட்டிப்பதாக கிடைத்த தகவலினால் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியள்ளது.