உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க செய்தி வாசிப்பாளருக்கு அழைப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளர் அழைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இதன்படி இன்று காலை குறித்த செய்தி வாசிப்பாளர் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ளார்.

இந்த ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஜனக டி சில்வா தலைமை தாங்குகிறார்.

இவரின் கீழ் ஐந்து பேர் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த ஆணைக்குழுவின் முன்னால் பாதுகாப்பு பிரிவுகளின் தலைவர்கள் உட்பட்ட பலர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.