மேலும் 96 மரணங்களை தம்வசப்படுத்திக் கொண்ட கொரோனா வைரஸ்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா ரைவஸினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 1868ஆக உயர்ந்துள்ளது, நேற்று வரை இந்த மரணங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

நேற்று மாத்திரம் ஹூபாயில் 93 மரணங்களும் சீனாவின் ஏனைய பகுதிகளில் ஐந்து மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனை சீனாவின் சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் புதிதாக 1866 பேர் கொரொனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையும் சேர்த்து சீனாவில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க 72ஆயிரத்து 436ஆகும். இதில் அதிகமானவர்கள் ஹூபாயை சேர்ந்தவர்களாவர்.