கிளிநொச்சி ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரி மாணவர்களால் அங்கு நிலவும் குறைப்பாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக தெரியவருகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த முறைப்பாடுகளை அடிப்படையாக வைத்து அமைச்சரின் இந்த விஜயம் அமைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தொழிநுட்ப கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தொழிநுட்ப கல்லூரியில் தொடர்ச்சியாக நிலவி வரும் பல்வேறு வகையான குறைப்பாடுகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி கூடிய விரைவில் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதிமொழி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.