யாழ்ப்பாண மரக்கறிகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி கோட்டாபய!

Report Print Tamilini in சமூகம்

மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில் மரக்கறி விலை குறைவடைந்துள்ளது.

அதற்கமைய கொழும்பு மெனின் சந்தையில் மரக்கறி விலை தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் சென்றுள்ளார்.

குறித்த மரக்கறிகள் அனைத்தினதும் விலை 30 முதல் 200 ரூபாய்க்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேபோல் தினசரி மரக்கறி விலை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மரக்கறி விலை குறைப்பின் நன்மை பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.