காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு ஆளுநரால் விசேட குழுவொன்று நியமனம்

Report Print Sumi in சமூகம்

வடக்கில் நிலவுகின்ற தீர்க்கப்படாத காணிப் பிணக்குளை தீர்ப்பதற்கு வட மாகாண ஆளுநரால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசேட குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி இராசேந்திரன் வசந்தசேனன் தலைவராகவும், மாகாண கணக்காய்வு திணைக்கள அதிபதி சுரேஜினி சந்திரசேகர், நடராசா இராத்தினம் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தில் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தீர்க்கப்படாதுள்ள 49 காணிப் பிணக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாக விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.