மாற்றுதிறனாளி மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

தமிழீழ விடுதலை கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரனது 72பிறந்த தினத்தை முன்னிட்டு உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பினால் 74 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து இன்று உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பின் தலைவரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், செட்டிக்குளம் பிரதேசசபை உறுப்பினர் சுஜீவன், செட்டிக்குளம் பிரதேச மாற்றுதிறனாளி சங்க தலைவர் லோகராஜா, வரோட் அமைப்பின் பிரதிநிதி ,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.