யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த கணவர்! பட்டினியுடன் ஆதரவற்று தவிக்கும் பிள்ளைகள்

Report Print Kanmani in சமூகம்

ஆணின் தலைமைத்துவம் இன்றிய குடும்பங்கள் எண்ணவோ இன்றும் பல ஆறாவடுக்களுடன் துயரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்த வகையில், முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் இறுதி யுத்தத்தில் இரண்டு கால்களையும் இழந்த கணவன் பிரசாத், ஒரு கண்ணை இழந்த மனைவி உதயதர்ஷினி, மூன்று பிள்ளைகளுடன் தமது வாழ்நாளை அன்றாடம் வறுமையின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இவர் பாதிக்கப்பட்ட கணவருடனும் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றார் உதயதர்ஷினி.

இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600