வவுனியா நகரசபை வளாகத்தில் மோட்டார் சைக்கிளினை உடைத்து பணம் திருட்டு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினை உடைத்து பணம் களவாடப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தந்த இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளினை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ள நிலையில்,ஆசனப்பகுதி உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பணம் களவாடப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பொலிஸார் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...