மாமனிதர் சிவனேசனின் நினைவேந்தல் நிகழ்வு!

Report Print Rakesh in சமூகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டிணன் சிவனேசனின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். வடமராட்சி, கரவெட்டியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

2008ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் திகதியன்று சிவனேசன் கொழும்பில் நாடாளுமன்றத்தில் இருந்து ஏ - 9 வீதி வழியாக தனது வாகனத்தில் மல்லாவி நோக்கி வந்துகொண்டிருந்தபோது மாங்குளத்தில் வைத்து ஆழ ஊடுருவும் படையணி மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவனேசனின் மறைவையடுத்து அவரின் தமிழ்த் தேசியப் பணியைக் கெளரவிக்கும் வகையில் 'மாமனிதர்' என்ற அதியுயர் விருதை தமிழீழ விடுதலைப்புலிகள் அவருக்கு வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...