மன்னார் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யுமாறு இளைஞர்கள் கோரிக்கை

Report Print Ashik in சமூகம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களை அரசியல் ரீதியில் முன்னேற்றும் வகையில் இன்றையதினம் இடம்பெற்ற இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட அதிகளவான இளைஞர்கள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிடுகின்ற இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இணையத்தளம் மூலம் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காத்தான்குடி, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி, புத்தளம், போன்ற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மன்னார் பிரதேச இளைஞர் வாக்காளர்களாக தங்களை இணையத்தளம் மூலம் பதிவு செய்துள்ள நிலையில் பல பேரூந்துகள் மூலம் மன்னார் நகரிற்கு வந்து வாக்களித்துள்ளனர்.

இதனால் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இளைஞர் வாக்காளர்களுக்கும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.

இதே வேளை மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக இளைஞர் வேட்பாளர்களும், வாக்காளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே வெளி மாவட்டங்கயில் இருந்து மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இடம் பெறும் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து வாக்களித்து செல்வதினால் குறித்த தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யவும், அல்லாதுவிட்டால் மாவட்ட ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக மன்னார் நகர வேட்பாளர்களும், இளைஞர் வாக்காளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் அவர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...