இலங்கையருக்கு அதிஷ்டமாக கிடைத்த 22.9 மில்லியன் ரூபாய்! சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டியில் கடந்த வாரம் லொத்தர் சீட்டில் 22.9 மில்லியன் ரூபா வென்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் 1.6 கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், லொத்தர் சீட்டில் பெருந்தொகை பணம் வென்றுள்ளார். இதன்மூலம் ஹெரோயின் கொள்வனவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் அவர் கண்டி மாநாகர சபையின் பணியாளராக பணியாற்றி வருகின்றார்.

கடந்த வாரம் குறித்த நபர் 22.9 மில்லியன் ரூபா வென்ற நிலையில் அந்த பணத்தில் 4 இலட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பணம் வென்ற சில நாட்களிலேயே நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You may like this video...