காத்தான்குடியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் விபத்திற்கு இலக்காகி உயிரிழப்பு

Report Print Navoj in சமூகம்

காத்தான்குடி - 3, கடற்கரை வீதி, சிறுவர் பூங்கா முன்பாக வீதியைக் கடக்க முற்பட்ட பெண் விபத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் இதில் ஓட்டமாவடி - 3, அஸ்கா பேக்கரி வீதியைச் சேர்ந்த பாத்தும்மா (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

அவர் தனது குடும்பத்துடன் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு செல்லும் போது வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது அந்த பெண் மீது முச்சக்கரவண்டியொன்று மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.