இரண்டு ஆண்டுகளாக காணாமல்போயுள்ள கணவன்! தேடியலையும் மனைவி, பிள்ளைகள்

Report Print Sumi in சமூகம்

அம்பன், குடத்தனையை பிறப்பிடமாகவும் குடத்தனை கிழக்கில் வசித்து வந்தவருமாகிய செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவர் கடந்த 09/03/2018 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் தொடர்பாக எவ்வித தகவல்களும் தெரியாமல் இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் தேடி வருகின்றனர்.

குறித்த நபர் காணாமல் போனது தொடர்பில் 10/03/2018 ம் அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபர் காணாமால் போன தினத்திலிருந்து ஒரு வார காலம் வரை தொலைபேசி இயங்கியிருக்கிறது. பலர் அதில் பேசியிருக்கிறார்கள், ஆனால் காணாமால் போன நபர் பேசவில்லை.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் பொலிஸார் அதில் அக்கறை கொள்ளவில்லை என காணாமல் போன நபரது உறவுகள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவரான செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதாவது தகவல் யாராவது அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களான 0771154704 அல்லது 0761660414 தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.