முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 57 தடைகள் நீக்கம்!

Report Print Vethu Vethu in சமூகம்

முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 57 புதிய சட்டங்களை அகற்ற போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே இயற்றப்பட்ட 67 சட்டங்களில் 10 சட்டங்கள் அதே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார பாகங்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளது.

எனினும் பயணங்களின் போது மற்ற ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படக்கூடாது என சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலங்கார தொழிலை பராமரிக்கும் நோக்கில் இந்த சட்டங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.