கோர விபத்தில் பெண் பலி - 13 பேர் படுகாயம்

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் எவரிவத்தை - யாகொடமுல்ல பிரதான வீதியின் ஹீனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு யாத்திரைக்கு சென்று திரும்பி வந்த குழுவினரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

குறித்த குழுவினர் பயணித்த கெப் வண்டியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் வீதியை விட்டு விலகி மின்சார தூணின் மீது மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது மினுவங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த பெண் ஹீனடியன பிரதேசத்தை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.