எங்கள் குடும்பம் எங்கள் வீடு எனும் தொனிப்பொருளில் தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

பொகவந்தலாவ கீழ்பிரிவு தோட்டத்தில் 50 தனி வீடுகளை அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் “மலையக எழுச்சி” செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நெறிப்படுத்தலில் “எங்கள் குடும்பம் எங்கள் வீடு” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்விற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்கியதுடன் அடிக்கல்லையும் நாட்டி வைத்துள்ளார்.

இதில் முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், இ.தொ.கா பொது செயலாளர் அனுஷா சிவராஜா, இ.தொ.கா இளைஞரணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.