புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மக்கள் பாதிப்பு

Report Print Navoj in சமூகம்

பொலன்னறுவை, வெலிக்கந்தை பகுதியில் இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நவசேனபுர கிராமத்திலுள்ள இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது ஒரு திட்டமிடாத வகையில் வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக கிராமத்தில் பலருக்கு பல்வேறுபட்ட நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரைப் பறிக்கும் நோய்கள் வரக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

புனர்வாழ்வு முகாமில் வெளியேறும் கழிவு நீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் குளத்தில் சேருவதனால் குளத்திலுள்ள மீன்களைப் பிடிப்பதற்கு மக்கள் பிடிக்க அச்சப்படுவதுடன், துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஜனாதிபதிக்கு மகஜர்கள் பல வழங்கியும் இதுவரையில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும், மிக விரைவில் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தந்தது நவசேனபுர பகுதியிலுள்ள மக்களின் சுகாதார நிலையிற் உறுதிப்படுத்தி தருமாறும் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.