ஹெரோயினுடன் சிக்கிய தாய் மற்றும் மகள்

Report Print Steephen Steephen in சமூகம்

பிலியந்தலை - தெல்தர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த தாய், மகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மற்றும் 2 ஆயிரம் போதைப்பொருள் பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 60 லட்சம் ரூபா பெறுமதியானவை என தெரியவருகிறது.

மூன்று மாங்களுக்கு முன்னர் தாயும் மகளும் இந்த வீட்டை 2 ,500 ரூபா மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வாடகை வீட்டில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இன்று நீதவானிடம் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.