வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் டிப்பருடன் மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞரொருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் பண்டாரிக்குளம் பாடசாலை வீதிக்கு திரும்ப முற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்த்திசையிலிருந்து வந்த மோட்டார்சைக்கிள் டிப்பரின் பின் சில்லுடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பானமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.