பங்களாதேஷில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

சட்டவிரோதமாக பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் நுழைந்த 24 இலங்கை மீனவர்களை அந்நாட்டு கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பலாங்கொட, பேருவளை, திருகோணமலை, ஆகிய பிரதேசங்களில் இருந்து 4 படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் சிட்டகொங் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களை விடுதலை செய்ய, வெளிவிவகார அமைச்சு ஊடாக ராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.