பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பலி!

Report Print Mubarak in சமூகம்

ஹபரன – பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தொன்றும், மோட்டார் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது விபத்தில், காந்தி திஸாநாயக்க வயது-56 மற்றும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.