இறுதிப்போரில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினரொருவர் மரணம்!

Report Print Nesan Nesan in சமூகம்

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், எறிகணை வீச்சில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டை சேர்ந்த சிவானந்தராசா ஜெயானந்தன் என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பத்தலைவரொருவரே இவ்வாறு சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெற்றிருந்த காலப்பகுதியில் ,அதன் பாதுகாப்பு அமைப்பில் இணைந்து பணியாற்றியிருந்த இவர்,2009 மாசி மாதம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தொடர் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு அண்மைக் காலமாக புற்றுநோய் தாக்கமும் ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


you may like this video...