வவுனியாவில் நடந்த கோர விபத்தின் பின்னணி - சிலரின் செயற்பாட்டால் பறிபோன உயிர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

வவுனியாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உயிர்கள் பலியாக காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வவுனியா - ஓமந்தைப் பகுதியில் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் விபத்து ஏற்பட்டது.

எனினும் விபத்து ஏற்பட்ட பின்னர் அங்கிருந்த சிலரினால் பேருந்திற்கு தீ வைக்கப்பட்டமையினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பேருந்து மற்றும் தனியார் வாகனம் முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளன.

இதன்போது குறித்த வாகனத்தை செலுத்தி சாரதி தீயினால் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட வாகன சாரதியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


you may like this video..