தென்னிலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் குத்திக் கொலை

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இரண்டு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூர்மையான ஆயுதம் ஒன்றில் தாக்கி இருவர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 28 வயதுடைய எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.