இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்ப்பாண விவசாயிகள்!!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் மலையென உயர்ந்து செல்லும் மரக்கறிகளின் விலைகளை யாழ்ப்பாண விவசாயிகள் குறைத்து வருவதாக சுட்டிக்காட்டப்படடுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் பாரியளவு குறைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகாலையிலேயே வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பன கிடைப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உருளைக்கிழங்கின் விலை தற்போது 75 - 80 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

500 - 600 ரூபா வரை அதிகரித்த வெங்காயத்தின் விலை தற்போது 230 - 250 ரூபா வரை குறைந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தேவையான அளவு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கிடைக்கின்றமையே விலை குறைப்புக்கு காரணமாகும்.

அடுத்து வரும் சில தினங்களில் இவற்றின் விலைகள் மேலும் குறைவடையும் என ம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இதனை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.