தம்பலகாமத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த புகை விசிறும் பணிகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தம்பலகாமம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நுளம்பை கட்டுப்படுத்த புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் பெருகி வரும் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்காக குறித்த புகை விசிறும் நடவடிக்கைகள் இன்று தம்பலகாமம் பகுதியின் பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது இனங்காணப்பட்ட டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களில் புகை விசிறப்பட்டதுடன், டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.