100 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நானு ஓயா சமர்செட் ஈஸ்டல் தோட்டத்தில் 50 தனி வீடுகளையும், கொட்டகலை யுனிபீல்ட் தோட்டத்தில் 50 தனி வீடுகளையும் கட்டி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் “மலையக எழுச்சி” செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நெறிப்படுத்தலில் “எங்கள் குடும்பம் எங்கள் வீடு” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இதன்போது, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், இ.தொ.கா பொது செயலாளர் அனுஷா சிவராஜா, இ.தொ.கா இளைஞரணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.