வடக்கு மாகாண கூட்டுறவு பணியாளர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர்

Report Print Sumi in சமூகம்

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் பணிகள், அபிவிருத்திச் செயற்பாடுகள், புதிய முயற்சிகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச் சந்திப்பின் போது வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள்,பிரிவு தலைவர்கள், சாமாஜங்களின் பிரதி தலைவர்கள், திணைக்களத்தின் செயலாளர் மற்றும் ஆணையாளர், உள்ளிட்ட குழுவினரும் ஆளுநரின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.