பிள்ளைகள் இருந்தும் நோயினால் நடக்க முடியாமல் சுயதொழில் செய்து தனியாக வாழும் மூதாட்டி

Report Print Banu in சமூகம்

வறுமையின் வலி, ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் உணர்ந்தவர்களுக்கே எந்த அளவுக்கு கொடுமையானது என்பது தெரியும்.

இதன் காரணமாக பலர் கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும் ஒன்றோடொன்று தொடர்புப்பட்டு வருமானம் ஈட்ட முடியாமல் ஏழ்மை நிலையிலேயே நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். வேறு சிலர் வேலை செய்தும் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான்- ஜீவநகர், முத்தையன் கட்டு , பகுதியைச் சேர்ந்த இராசதுரை அன்னலட்சுமி , நோயினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாதவர்.

இவரது கணவன் உயிரிழந்துள்ள நிலையில் பிள்ளைகளும் கைவிட்டுள்ள நிலையிலும் தன்னால் இயன்ற சுயதொழில் முயற்சியை மேற்கொண்டு அன்றாடம் தன் வாழ்வினை கழிக்க போராடி வருகின்றார்.

மிகவும் துயரத்தின் மத்தியில் தமது அன்றாட வாழ்வை கழித்து வரும் இவரது வாழ்வில் நல் உள்ளங்கள் நினைத்தால் ஒளியேற்ற முடியும்.

அந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து செய்யும் உதவி அவர்களது வாழ்க்கையில் சிறந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

இவர்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் துயரங்களை எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ள காணொளி உங்கள் பார்வைக்காக,

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600