கைது செய்யப்பட்ட பணியாளர்களை விடுவிக்குமாறு இலங்கை நைஜீரியாவிடம் கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

பெற்றோலியம் உற்பத்திகளை சட்டவிரோதமாக போக்குவரவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 7 பேரை விரைவில் விடுதலை செய்து தாயகத்துக்கு திருப்பியனுப்புமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

அபுஜாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகம் இந்தக்கோரிக்கையை நைஜீரியா அதிகாரிகளிடம் விடுத்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் பெற்றோலிய உற்பத்திகள் சட்டவிரோதமாக போக்குவரவு செய்யப்படுவதை அறிந்திருக்கவில்லை என்று உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு;ள்ள இலங்கையர்கள் இதனை தமக்கு அறிவித்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது

கடந்த டிசம்பர் 12ஆம் திகதியன்று 838 மெற்றிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்த இலங்கையர்கள் நைஜீரியா படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 20ம் திகதி இலங்கை உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சென்று சந்தித்தனர்.

இதன்போது குறித்த இலங்கையர்கள் சட்டவிரோதம் என்று அறியாமலேயே குறித்த எண்ணெய் கப்பலில் பணியாற்றியுள்ளமை தெரியவந்ததாக உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் நைஜீரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.