இந்தியாவில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அடிப்படைவாத தலைவர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

இஸ்லாமிய தீவிரவாத மதகுருமார் சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழகத்தின் ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் மும்பையின் சாஹிர் நாயக் ஆகியோரும் இதில் அடங்குவதாக பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இவர்கள் இலங்கைக்கு வந்த வேளையில் மத பிரசாரங்களையும் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் குடிவரவு திணைக்களத்துடன் இணைந்து பாதுகாப்பு பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே மதரஸாக்கள் முஸ்லீம் விவகார திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வரப்படவேண்டும் என பாதுகாப்பு நாடாளுமன்ற கண்காணிப்பு குழு பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது