இலங்கையில் விசித்திரமான கிராமங்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தறையில் சில பகுதிகளில் தொலைபேசி வசதிகள் இல்லாத போதிலும், அதற்காக கட்டணம் பட்டியல்கள் வருவதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

பல வருடங்களாக மாத்தறை - லக்கல ரணமுரே மற்றும் நாரஙகமுவ ஆகிய கிராமங்களில் தொலைபேசி வசதிகள் இல்லை.

இங்கு சுமார் 1000 குடும்பங்களுக்கு தொலைபேசி வசதிகள் இல்லாத நிலையில் தொலைபேசி கட்டண பட்டியல் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட தொலைபேசி கனவு இன்னமும் கனவாகவே உள்ளதாகவும், அது இன்னமும் நிறைவேறவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு முன்னர் CDMA தொலைபேசிகள் வழங்கப்பட்ட போதும் அதற்கான சமிக்ஞை இல்லாமையினால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பயன்படுத்தாத தொலைபேசிகளுக்கு கட்டண பட்டியல் மாத்திரம் ஒவ்வொரு மாதமும் வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்த போதிலும் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக தாம் வழங்கு தாக்கல் செய்யவுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களால் அவசர நேரத்திலேனும் ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.