கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் உதவி சுகாதார அமைச்சர்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் காரணமாக ஈரானின் உதவி சுகாதார அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதவி சுகாதார அமைச்சர் இராஜ் ஹரிர்சி நேற்று தெஹ்ரானில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றவேளையில் சுகவீனமடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இதன்போது அவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமை சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தாம் பிழைப்பது கடினம் என்ற டுவிட்டர் செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இந்த நோயில் இருந்து பாதுகாப்பதற்காக அவர்களை விடுதலை செய்யுமாறு ஈரானின் நீதித்துறை தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.