இலங்கையின் அரச பாடசாலைகளின் அதிபர்களும் ,ஆசிரியர்களும் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன இந்த கூட்டு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன்,இன்று எதிர்ப்பு பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பத்தரமுல்லையில் உள்ள புத்ததாச மைதானத்தில் ஆரம்பமாகும் பேரணி கல்வி அமைச்சில் நிறைவடையவுள்ளது.
2019 ஒக்டோபர் 01ம் திகதியன்று, முதன்மை ஆசிரியர் சேவைகளை முடிவுறுத்தவும், 23 வருடங்களாக சேவையில் இருந்த ஆசிரியர் முதன்மை சம்பள முரண்பாடுகளை அகற்றவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
2019, ஒக்டோபர் 15ம் திகதியன்று இடைக்கால கொடுப்பனவு திட்டம் ஒன்றுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
எனினும் இதுவரை இந்த இரண்டு தீர்மானங்களும் நடைமுறைக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்டியே குறித்த சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.