சிறுமி வன்புணர்வு சம்பவம் தொடர்பில் பிரபல நடிகையிடம் வாக்குமூலம்

Report Print Steephen Steephen in சமூகம்

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தும் காணொளி தொடர்பில் பிரபல நடிகை பியூமி ஹன்சமலியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹன்சமாலி தொடர்ந்தும் இது தொடர்பான தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த காணொளி சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக மாணிக்க கல் வியாபாரியான பிரியங்க புஷ்பகுமாரவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.